திருவையாறில் சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

திருவையாறில் சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

திங்கட்கிழமை, ஜனவரி 04, 2016

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
ஏழை-எளியோருக்கும் உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், முதலமைச்சர் ஜெயலலிதா சிந்தனையில் உதித்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். அதன்தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சார்பில், திருவையாற்றில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம் தொடங்கிவைத்தார். இந்த முகாமில், தனித்தனி சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு, இரத்த பரிசோதனை, முடநீக்கியல், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு உயர்தர சிகிச்சைகளை வழங்கினர். ஏழை-எளியோரும் பயனடையும் வகையில், சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்த முதலமைச்சர்ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். சிறப்பு மருத்துவ முகாம் தொடக்க நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு. பரசுராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.