தி.மு.க. ஆட்சியில்,பழுதடைந்து கிடந்த தூத்துக்குடி அனல்மின் நிலையம் ,முதலமைச்சர் ஜெயலலிதா 970 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து புனரமைத்ததால் முழு உற்பத்தியை எட்டி சாதனை!

தி.மு.க. ஆட்சியில்,பழுதடைந்து கிடந்த தூத்துக்குடி அனல்மின் நிலையம் ,முதலமைச்சர் ஜெயலலிதா 970 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து புனரமைத்ததால் முழு உற்பத்தியை எட்டி சாதனை!

செவ்வாய், ஏப்ரல் 05,2016,

தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசின் அனல் மின் நிலையத்தை புனரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில், இந்த அனல் மின் நிலையத்தில் அனைத்து 5 அலகுகளும் முழுமையாக செயல்பட்டு, தினமும் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அனல் மின் நிலைய ஊழியர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகம் மின் பற்றாக்குறையால் இருளில் மூழ்கி தவித்த நிலையை மாற்றி, முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சிறப்பு மிகு நடவடிக்கைகளால், தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான் தூத்துக்குடி அனல் மின் நிலைய புனரமைப்பு ஆகும். முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால், 34 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5 அலகுகளும், நாளொன்றுக்கு ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் படைத்ததாகும்.

தி.மு.க. ஆட்சியின்போது, தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்தது, அனல்மின் நிலைய இயந்திரங்கள் போதிய பராமரிப்பு இன்றி கிடப்பில் போடப்பட்டது போன்ற காரணங்களால், இந்த அனல்மின் நிலையத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், நஷ்டத்தில் இயங்கி வந்தது. 2011-ல் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதா, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் அலகுகளை புனரமைக்கவும், கொதிகலன்களை புனரமைக்கவும், சுமார் 970 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக தற்போது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தொடர்ச்சியாக தினமும் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பழுதடைந்து பராமரிப்பின்றி இருந்த தூத்துக்குடி அனல்மின் நிலையத்தை போர்க்கால நடவடிக்கை எடுத்து, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மின் உற்பத்தியை சீரான வகையில் ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அனல்மின் நிலைய ஊழியர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த பொதுமக்களும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளதுடன், மக்கள் நலனே தமது நலனாக கொண்டு நாள்தோறும் திட்டங்களை தந்து, மக்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வரும் தேர்தலிலும் தங்களது வாக்கு என்று, தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.