தூத்துக்குடியில் ஏழை மக்கள் நலனுக்காக 8 கோடியில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் ஒரே மாதத்தில் 75 பேருக்கு பரிசோதனை : முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

தூத்துக்குடியில் ஏழை மக்கள் நலனுக்காக 8 கோடியில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் ஒரே மாதத்தில் 75 பேருக்கு பரிசோதனை : முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

வியாழன் , மார்ச் 24,2016,

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 8 கோடி ரூபாயில், நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி மூலம், ஒரே மாதத்தில் 75 பேர் பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் கொடுத்து பரிசோதனை செய்ய முடியாமல் ஏழை மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், இதற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையும் இருந்து வந்தது. இதை கருத்தில்கொண்டு, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 7 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிநவீன எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி அமைக்க முதலமைச்சர் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த படி, கடந்த மாதம் காணொளி காட்சி மூலம் இதனை திறந்து வைத்தார். இதன் மூலம் நோயாளிகள் பலரும் இந்த வசதியை மிகக் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 23 நாட்களில் மட்டும் சுமார் 75 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.