தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை பூங்காவை அமைத்துக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை பூங்காவை அமைத்துக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

செவ்வாய், மார்ச் 22,2016,

தூத்துக்குடியில், தமிழக அரசால் உருவாக்கப்பட்ட முத்துநகர் கடற்கரை பூங்காவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். இத்தகைய அழகான கடற்கரை பூங்காவை அமைத்துக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த 2013ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா ஆண்டின் நினைவாக, திரேஸ்புரம் கடற்கரை அருகே, ஒருகோடியே 80 லட்சம் ரூபாய் செலவில், முத்துநகர் கடற்கரை பூங்காவை தமிழக அரசு உருவாக்கியது. இப்பூங்கா, மீன்வடிவில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு, அழகிய நிழற்குடைகள், சிறுவர்கள் விளையாடுவதற்கான நவீன விளையாட்டு சாதனங்கள், குதிரை சவாரி, நடைபயிற்சி மேடை, சிற்றுண்டி சாலை என மிகுந்த அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், மாலை நேரங்களில் பொதுமக்கள் இந்த பூங்காவுக்கு அதிக அளவில் வருவதோடு, வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், இந்த கடற்கரை பூங்காவில் பொழுதை கழித்து வருகின்றனர். தூத்துக்குடியில் இத்தகைய அழகான கடற்கரை பூங்காவை அமைத்துக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.