தூத்துக்குடி மாவட்ட சிறுவணிக வியாபாரிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

தூத்துக்குடி மாவட்ட சிறுவணிக வியாபாரிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

புதன், மார்ச் 09,2016,

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் சிறுவணிகர்களுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, சிறுவணிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களின் தொழில் முற்றிலும் முடங்கியதால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாது திகைத்தனர். எனினும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உடனடியாக விரைந்து செயல்பட்டு, சிறுவணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் 5 ஆயிரம் கடனுதவி கிடைக்க உரிய ஏற்பாடு செய்தார். இதன்மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 10,375 சிறு வணிகர்களுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. இதைக்கொண்டு மீண்டும் தங்கள் தொழிலை தொடங்கிய சிறுவணிகர்கள், கடன் தொகையையும் வங்கிகளுக்கு செலுத்தி வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.