தேர்தலில் அறிவித்த 54 வாக்குறுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிவிட்டார்:அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்

தேர்தலில் அறிவித்த 54 வாக்குறுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிவிட்டார்:அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்

ஞாயிறு, மார்ச் 06,2016,

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அறிவித்த 54 வாக்குறுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார் என்று, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் ஐ.பூங்கோதை வரவேற்றார். ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமை வகித்தார்.

169 ஏழை பெண்களுக்கு ரூ.72.99 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தலா 4 கிராம் தங்கத்தை, அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.

அவர் பேசும்போது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அறி வித்த 54 வாக்குறுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா முழுமை யாக நிறைவேற்றியுள்ளார். விலை யில்லா அரிசி வழங்கும் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பசுமை வீடுகள் கட்டும் திட்டம், விலையில்லா மின்விசிறி, திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் உட்பட பல்வேறு நலத் திட்டங்கள், தமிழ கத்தில் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகின்றன” என்றார்.

சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் கே.பி.பரமசிவம் (பல்லடம்), அ.கருப்பசாமி (அவிநாசி), துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.