தேர்தலுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் மீண்டும் தொடக்கம் : பொதுமக்கள் நன்றி

தேர்தலுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் மீண்டும் தொடக்கம் : பொதுமக்கள் நன்றி

சனி, மே 28,2016,

தமிழகத்தில் தேர்தல் காரணமாக இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்மா திட்ட முகாம்கள், மீண்டும் தொடங்கியுள்ளது. வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற எளிமையாக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மக்களை நாடி அரசு என்ற உன்னத திட்டத்தின் மூலம், முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் நீக்குதல், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை எளிதில் பெற அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் காரணமாக இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்மா திட்ட முகாம்கள், முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து மீண்டும் தொடங்கியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய தாலுகாக்களில் மீண்டும் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த முகாம்கள் சான்றிதழ்கள் பெற மிகவும் வசதியாக இருப்பதாக கூறும் பொதுமக்கள், இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.