தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனம் மீது புகார் கொடுப்பதற்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனம் மீது புகார் கொடுப்பதற்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு

வெள்ளி, ஏப்ரல் 29,2016,

தமிழக சட்டசபை தேர்தல் மே 16–ந் தேதி நடப்பதையொட்டி, அன்று கடைகள், நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுப்பு அளிப்பது தொடர்பாக தொழிலாளர் ஆணையர் பெ.அமுதா, வேலையளிப்போர் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்வேறு கடைகள், சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க் ஆகியவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும்படி, வேலையளிப்போர் பிரதிநிதிகளுடன் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இது சம்பந்தமாக தேர்தல் நாளன்று புகார் தெரிவிப்பதற்காக முதன் முறையாக மாநில மற்றும் மாவட்ட அளவில் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில அளவிலான புகார்களை, லட்சுமி காந்தன், தர்மசீலன், கமலக்கண்ணன், விமலநாதன், கீதா, சுரேஷ்குமார் ஆகியோரிடம் முறையே 9445398801, 9445481440, 9445398695, 9445398694, 9840746465, 9488967339 ஆகிய எண்களில் கொடுக்கலாம்.

சென்னை மாவட்டத்தில் (வடக்கு), கிரிராஜன், செல்வராஜ், செல்வம், மோகன், ராஜாங்கம் ஆகியோரிடம் முறையே 9840432526, 9840432526, 9952023826, 9444154571, 9489417215 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம். சென்னை தெற்கு பகுதியில், நீலகண்டன், பாரி, புவனேஸ்வரி, இளமதி, சசிகலா ஆகியோரிடம் முறையே 9445398739, 9600183368, 9942226557, 9740298294, 9791019415 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம்.

சென்னை மத்திய பகுதியில், வாசுகி, மீனாட்சி, மயில்வாகனன், நோயல் பிரகாஷ், ஜான் ஜவஹர் எட்வின் ஆகியோரிடம் முறையே 9445398740, 9710825341, 9840456912, 9940179688, 9791078512 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம். காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெற்றிச் செல்வி, லிங்கேஸ்வரன், தாசரதி, பிரான்சிஸ்சேவியர், மணிமேகலை ஆகியோரிடம் முறையே 9445398743, 9842698133, 9841208118, 9444297306, 9566005577 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சிவக்குமார், ராஜ்குமார், ராஜாராமன், சங்கர், சேதுராமன் ஆகியோரிடம் முறையே 9445398745, 9976123193, 9500133373, 9940539343, 9444676447 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம்.