தேர்தல் பணிகள் குறித்த முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துரைத்து, அ.இ.அ.தி.மு.க.வின் முழுமையான வெற்றிக்கு பாடுபட முடிவு

தேர்தல் பணிகள் குறித்த முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துரைத்து, அ.இ.அ.தி.மு.க.வின் முழுமையான வெற்றிக்கு பாடுபட முடிவு

சனி, மார்ச் 19,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துரைத்து, அ.இ.அ.தி.மு.க.வின் முழுமையான வெற்றிக்கு பாடுபடுவது என்றும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவது என்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேர்தல் பணிகள் குறித்த முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில், 9 மண்டலங்களில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் திரு. முக்கூர் என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில், தேவனந்தல், ஆடையூர், வேங்கிக்கால், கீழாநச்சிப்பட்டு, மலப்பாம்பாடி ஆகிய 5 ஊராட்சிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் களப்பணியாற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில், மாநகர அ.இ.அ.தி.மு.க அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் திரு. செல்லூர் கே.ராஜு உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், முதலமைச்சரின் சரித்திர சாதனைகளை வீடுகள்தோறும் எடுத்துரைத்து கழகத்தின் முழுமையான வெற்றிக்கு பாடுபடுவது என ஆலோசனை வழங்கப்பட்டது.

மதுரை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் அலங்காநல்லூரில், தேர்தல் பணிகள் குறித்து வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மேயர் திரு. ராஜன் செல்லப்பா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரிப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்தும், வாக்குச்சாவடியில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வேலூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதி, சோழவரம் ஒன்றியம், பஞ்செட்டி, ஆமூர், ஆண்டார்குப்பம், மாதவரம் உள்ளிட்ட 8 ஊராட்சிகளைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தச்சூரில் நடைபெற்றது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான பொற்கால ஆட்சியில், ஏழை-எளிய மக்களுக்கு செயல்படுத்தியுள்ள எண்ணற்ற நலத்திட்டங்களை, வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பது தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் கையேடுகள் வழங்கப்பட்டன.

இதனிடையே, அரியலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், சட்டமன்றத் தேர்தலையொட்டி அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 583 வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணி தொடங்கியது. பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.