தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் முதலமைச்சருக்கு விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் நன்றி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் முதலமைச்சருக்கு விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் நன்றி

செவ்வாய், மே 24,2016,

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, முக்கிய 5 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டதற்கு விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வெகுவாக வரவேற்றுள்ளதுடன், முதலமைச்சருக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பூரண மதுவிலக்கைஎட்டும் நோக்கில், முதலமைச்சர்  ஜெயலலிதா எடுத்துள்ள நடவடிக்கையை பெண்கள் மிகவும் வரவேற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற சரித்திர சாதனை வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் முதலமைச்சராக தவியேற்றுக்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல் கையொப்பமிட்டார். தொடர்ச்சியாக, அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் ரத்து, தாலிக்கு 8 கிராம் தங்கம், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் அதிகரிப்பு மற்றும் சில்லறை விற்பனை மதுபானக் கடைகளின் நேரம் குறைப்பு உள்ளிட்ட கோப்புகளில் முதலமைச்சர் கையொப்பமிட்டார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட இந்த நடவடிக்கையை விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். பதவியேற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கிய முதலமைச்சருக்கு அனைத்து தரப்பினரும் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்