தொடர்ச்சியாக 2- வது முறையாக ஆட்சியை பிடித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

தொடர்ச்சியாக 2- வது முறையாக ஆட்சியை பிடித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

வெள்ளி, ஜூன் 17,2016,

சென்னை : தமிழ்நாட்டில் 32 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா சட்டசபையில் பாராட்டு தெரிவித்தார். நாட்டிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக முன்னேற்ற உரிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா வகுத்துள்ளார் என்று சட்டசபையில் கவர்னர் ரோசய்யா கூறினார்.

தமிழகத்தின் 15வது சட்டசபைக்கு கடந்த மே 16–ந்தேதி நடைபெற்ற தேர்தலில் 134 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியை பிடித்து 6–வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார். முதல்வர் ஜெயலலிதா 32 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரான பிறகு நேற்றுந முதன் முதலாக தமிழக சட்டசபை கூடியது.

15வது சட்டசபையில் தொடக்க உரையாற்ற சட்டசபைக்கு நேற்று காலை 11 மணிக்கு கவர்னர் ரோசய்யா வந்தார். அவருக்கு சபாநாயகர் தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர்கள் இருவரும் கவர்னரை சட்டசபைக்கு அழைத்து வந்தனர். முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அவையோர் எழுந்து நின்று கவர்னரை வரவேற்றனர்.
பின்னர், ஆளுநர் டாக்டர் கே. ரோசய்யாவை, பேரவைத் தலைவரும், சட்டப்பேரவைச் செயலாளரும் பேரவைக்கு அழைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கியது.

இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஆளுநர், முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் பல்வேறு மகத்தான சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு, முதலமைச்சருக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.