த.மா.கா – வை சேர்ந்த 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

த.மா.கா – வை சேர்ந்த 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சனி, ஜூலை 16,2016, 

சென்னை: த.மா.கா.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், நேற்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருஞானசம்பந்தம், பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவருமான ராம்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதேபோல், திருவாரூர் மாவட்ட தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் பாலாஜி, மாவட்ட துணைச் செயலாளர்களான மோகன்குமார், எம்.ஆர்.டி. ராமச்சந்திரன், ஒன்றியச் செயலாளர்களான விஜயகாசி, கொரடாச்சேரி குமார் (எ) வீரக்குமார், வலங்கைமான் ராஜசேகர், முத்துப்பேட்டை முருகேசன், கோட்டூர் முருகானந்தம், மன்னார்குடி கென்னடி, நன்னிலம் மவுனகுரு, நீடாமங்கலம் ரமேஷ், திருவாரூர் நகரச்செயலாளர் செந்தில்குமார், திருத்துறைப்பூண்டி நகரச்செயலாளர் அண்ணாதுரை, மன்னார்குடி நகரப்பொறுப்பாளர் ரமேஷ்.

மேலும், மாவட்ட விஜயகாந்த் மன்றச்செயலாளர் தேவதாஸ், மாவட்ட மாணவர் அணிச்செயலாளர் செந்தில் (எ) திருஜோதி செல்வம், மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் நாகவள்ளி. மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, நன்னிலம் பேரூராட்சி செயலாளர் நசரத், மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் வெங்கட மணிகண்டன் பொன்னுசாமி ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, திருவாரூர் மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான காமராஜ் உடன் இருந்தார். கருணை உள்ளத்தோடு தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை அவர்கள் தெரிவித்துக் கொண்டனர்” என்று கூறப்பட்டு உள்ளது.