நாகர்கோவிலில் அ.தி.மு.க. அரசின் 4½ ஆண்டு சாதனை விளக்க எழுச்சி பேரணி தமிழ்மகன் உசேன் தொடங்கி வைத்தார்

நாகர்கோவிலில் அ.தி.மு.க. அரசின் 4½ ஆண்டு சாதனை விளக்க எழுச்சி பேரணி தமிழ்மகன் உசேன் தொடங்கி வைத்தார்

வியாழன் , பெப்ரவரி 11,2016,

அ.தி.மு.க. அரசின் 4½ ஆண்டுகால சாதனைகளை விளக்கி நாகர்கோவில் ஜெயலலிதா பேரவை சார்பில் எழுச்சி பேரணி நடந்தது. பேரணிக்கு மாவட்ட பேரவை செயலாளர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். நகர பேரவை செயலாளர் கவுன்சிலர் அய்யப்பன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசிய உரை தொகுப்பு அடங்கிய கைப்பிரதியை வழங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி கம்பளம், பஜார், வடிவீஸ்வரம் வழியாக மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன் முடிவடைந்தது. பேரணியில் பங்கேற்ற அ.தி.மு.க. மகளிர் அணியினரும், தொண்டர்களும் கைகளில் ஜெயலலிதா உருவப்படம் தாங்கிய அட்டைகளையும், கட்சிக் கொடியையும் கைகளில் ஏந்தி வந்தனர். பேரணி பாதையில் பஸ் பயணிகள், கடை வியாபாரிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கைப்பிரதிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜஸ்டின் செல்வராஜ், கவிஞர் சதாசிவம், ராஜன், அசோகன், ஜெயசீலன், ஜெயச்சந்திரன் என்ற சந்துரு, காரவிளை செல்வன், டாரதி சாம்சன், சந்திரன், என்ஜினீயர் லெட்சுமணன், கோட்டார் கிருஷ்ணன், சதானந்தன், வக்கீல்கள் ஜெயகோபால், முருகேஷ்வரன் கவுன்சிலர் செல்லத்தாய், நீலகண்டன், ரபீக், ரெயிலடி மாதவன், ராயல் ராபின், கலைவாணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.