நாகை மாவட்டத்தில் கடல்நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் அமைக்கும் பணி தொடங்கியது

நாகை மாவட்டத்தில் கடல்நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் அமைக்கும் பணி தொடங்கியது

சனி, மார்ச் 05,2016,

நாகை மாவட்டத்தில் கடல்நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் மற்றும் ரெகுலேட்டர்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

காவிரி ஆற்றின் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில், ஆறுகள் மற்றும் கிளை ஆறுகள் கடலில் கலக்கின்றன. இந்நிலையில், திருமங்கலத்தில் உள்ள விக்கிரமன் ஆற்றின் குறுக்கே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை, மாதிரிமங்கலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 1 கோடியே 48 லட்சம் மதிப்பில் தடுப்பணை, கொத்தங்குடியில் வீரசோழனாற்றின் குறுக்கே தடுப்பணை, என 5 இடங்களில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டும்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறுவதுடன் நிலத்தடி நீர் மட்டமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தில்லையாடி, புளியந்துறை ஆகிய இடங்களில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெகுலேட்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.