நாகை மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 2,56,802 டன் நெல் கொள்முதல் : நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

நாகை மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 2,56,802 டன் நெல் கொள்முதல் : நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

வெள்ளிக்கிழமை, மார்ச் 25, 2016,

நாகை மாவட்டத்தில் 283 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 802 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர் இன்றி நெல்லுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் 3 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 95 சதவீதம் நெல் அறுவடைப்பணிகள் நிறைவடைந்துள்ளன. விவசாயிகளிடமிருந்துநெல் கொள்முதல்செய்ய ஏதுவாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, கடந்த ஜனவரி மாதம் 283 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் திறக்கப்பட்டன. இதன்காரணமாக, இதுவரை, நாகை மாவட்டத்தில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 802 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சன்னரக நெல்லுக்கு, குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரத்து 520 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு ஆயிரத்து 460 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. இதனால், வியாபாரிகள், இடைத்தரகர்கள் தலையீடு இன்றி நெல்லுக்கு நல்லவிலை கிடைத்துள்ளது. மேலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் போது, முறைகேடு நிகழாமல் தடுக்க விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இளந்தோப்பு, சங்கமங்கலம், எரவாஞ்சேரி, கடக்கம், திருவிளையாட்டம், உள்ளிட்ட எட்டு இடங்களில் 2 கோடி ரூபாய் மதிப்பில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக, முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.