நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி

ஞாயிறு, ஜூலை 24,2016,

சென்னை : சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை அருகில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இந்திய ராணுவத்தால் புதிதாக  நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை அருகில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பெரும்பான்மையான போர் நினைவகங்களில் தேசியக்கொடியுடன் கூடிய கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ள நிலையில், பாரம்பரியத்தையும், தேசப்பற்றையும், பறைசாற்றும் வகையில், புனித ஜார்ஜ் கோட்டை அருகில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில் இந்திய ராணுவத்தின் சார்பில் புதிதாக 30.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பம் தற்போது நிறுவப்பட்டுள்ளது.

போர் நினைவு சின்னத்தில் இந்திய ராணுவத்தின் சார்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியேற்றி வைக்கும் நிகழ்ச்சியில், நேற்று, முதல்வர் ஜெயலலிதா நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் பா. இராம மோகன ராவ், தமிழ்நாடு அரசு ஆலோசகர்  ஷீலா பாலகிருஷ்ணன், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை தீவுத்திடல், ததிம்ன் பாரத் ஏரியா ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினெட் ஜெனரல் ஜெக்பீர் சிங், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நேவல் ஏரியா ஃபிளாக் ஆபீசர் காமாண்டிங் ரியர் அட்மிரல் அலோக் பட்நகர், இந்திய கடலோர காவற்படை மண்டலம் (கிழக்கு) கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜென்ரல் ராஜன் வர்கோத்ரா, ராணுவ உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.