நெல்லையில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாநகராட்சி அலுவலர்கள்

நெல்லையில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாநகராட்சி அலுவலர்கள்

வெள்ளி, டிசம்பர் 25,

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலப்பாளையத்தில் நடைபெற்ற தொற்றுநோய் தடுப்பு முகாமை மேயர் திருமதி புவனேஸ்வரி தொடங்கி வைத்தார். இந்த முகாமில், நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர் திரு. ராஜேந்திரன் தலைமையில் 8 மருத்துவர்கள், 36 சுகாதார செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். தொற்று நோய் தடுப்பு குறித்து வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குடிநீரில் குளோரின் கலப்பதின் அவசியம், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து களப்பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த முகாமையொட்டி, ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டது. நெல்லை மாநகராட்சியின் தொடர் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தொற்றுநோய் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.