படையாச்சியார் பேரவை உள்ளிட்ட 30 வன்னியர் அமைப்புகள், அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு : அ.இ.அ.தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அறிவிப்பு

படையாச்சியார் பேரவை உள்ளிட்ட 30 வன்னியர் அமைப்புகள், அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு : அ.இ.அ.தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அறிவிப்பு

புதன், ஏப்ரல் 06,2016,

தமிழக சட்டமன்றத் தேர்தலில் படையாச்சியார் பேரவை உள்ளிட்ட 30 வன்னியர் அமைப்புகள், அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் இத்தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாகவும் இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பேசிய படையாச்சியார் பேரவையின் மாநிலத் தலைவர் திரு.திருவாரூர்காந்தி, தங்கள் அமைப்பு உட்பட மொத்தம் 30 வன்னியர்கள் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அனைத்து அமைப்புகளும் சேர்ந்து, புதிய உழைப்பாளர் கட்சி என்ற கட்சியைத் தொடங்கியிருப்பதாகவும், இத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். தமிழகம் முழுவதும் தங்கள் அமைப்பினர் சுற்றுப் பயணம் செய்து, அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வார்கள் என அவர் தெரிவித்தார். குறிப்பாக, வன்னியர்களின் ஓட்டுக்களைப் பெற்று அச்சமுதாயத்திற்கு துரோகம் இழைத்துவரும் பாட்டாளி மக்கள் கட்சி, அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும் வகையில் தங்கள் பிரச்சாரம் இருக்கும் என்றும் கூறினார்.