பருவமழை நிலவரம்-மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆய்வு

பருவமழை நிலவரம்-மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பருவமழை நிலவரம் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், கே.ஏ.ஜெயபால், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை விரைந்து முடிக்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.