பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஜூலை 04,2016,

சென்னை:பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலி்தா அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

9.3.2016 அன்று திருப்பூர் மாவட்டம், போயம்பாளையத்தைச் சேர்ந்த. பழனிச்சாமி என்பவரின் மகன் காளிமுத்து தீ விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; 28.4.2016 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், ஜி.நாகமங்கலம் கிராமம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்தகாசி என்பவரின் மனைவி ராணி, . புட்டன் என்பவரின் மகன். பிரகாஷ், திரு. சீனிவாசன் என்பவரின் மகன் திரு.கார்த்திக்,. பெருமாள் என்பவரின் மகன். காசி, கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தமதலைமுத்து என்பவரின் மகன். சகாயம், ஐ.கொத்தப்பள்ளி கிராமத்தைச்சேர்ந்த முன்னாசிங் என்பவரின் மகன் சிவக்குமார்; தென்கரைக்கோட்டைகிராமத்தைச் சேர்ந்த. இக்பால் என்பவரின் மகன். அப்துல்கைம் ஆகியோர்உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
4.5.2016 அன்று திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம்,மேலக்கடையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த. முருகன் என்பவரின் மகன்கருப்பசாமி என்கிற. சின்னராசு, மாடசாமி என்பவரின் மகன். சின்னராசு. முப்பிடாதி என்பவரின் மகன் விஜய்;31.5.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன். இனியாஸ், உளுந்தூர்பேட்டை வட்டம், மதியனூர் கிராமத்தைச் சேர்ந்த குப்பபிள்ளை என்பவரின்மகன். கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐந்து பேரும் இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;31.5.2016 அன்று வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வடக்குப்பட்டுகிராமத்தைச் சேர்ந்த சின்னத்தாய் என்பவர் தேசிய ஊரக வேலை வாய்ப்புதிட்டத்தின் கீழ் பாரதியார் நகர், பட்டறை கால்வாய் அருகே வேலை செய்து கொண்டிருந்த போது மயக்கமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்,