பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த போலீசார், மின்துறை ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த போலீசார், மின்துறை ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஆகஸ்ட் 01,2016,

சென்னை : மறைந்த  19 காவலர்கள் உள்ளிட்ட 23 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி உதவியாக தலா ரூ 3 லட்சம் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

  இது குறித்து   தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:

6.3.2016 அன்று சென்னை பாதுகாப்பு பிரிவு குற்ற புலனாய்வுத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சரவணன்; 6.5.2016 அன்று வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில்தலைமைக் காவலராகப் பணி புரிந்த  மனோகரன்; 8.5.2016 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், பாகசாலை காவல் நிலையத்தில்சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த  .நாகராஜன்; சென்னை பெருநகர காவல், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி; 11.5.2016 அன்று சென்னை, குமரன் நகர் காவல் நிலையத்தில் சிறப்புஉதவி ஆய்வாளராகப் பணி புரிந்த .சிவபெருமான்; 12.5.2016 அன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணி புரிந்த  ஆ.சரவணன்; பெரம்பலூர் மாவட்ட ஆயுதப் படை பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த  தாமஸ் தர்மராஜ்;  24.5.2016 அன்று திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த.சங்கரபாண்டியன்; 13.6.2016 அன்று சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-1, G-நிறுமம்,

42-ம் அணி, எழும்பூர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த.சொர்ணசுந்தரம்; 14.6.2016 அன்று மதுரை மாநகரம், செல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த ராஜமாணிக்கம்; 24.6.2016 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த .பாலசுப்பிரமணியன்; ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும்; 21.4.2016 அன்று மதுரை மாநகரம், தெப்பக்குளம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த திரு. சுப்பையா; 27.4.2016 அன்று தேனி மாவட்ட ஆயுதப் படை வாகனப் பிரிவில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணி புரிந்த .ராஜேஸ்வரன்; 17.6.2016 அன்று மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில்தலைமைக் காவலராகப் பணி புரிந்த . ஜெயபாண்டி; 25.6.2016 அன்று ஈரோடு மாவட்டம், நம்பியூர் காவல் நிலையத்தில் உதவிஆய்வாளராகப் பணி புரிந்த .பிரகாசம்;

28.6.2016 அன்று வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில்சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த.மூர்த்தி; 29.6.2016 அன்று சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை – 1,  நிறுமம், 12ம் அணியில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணி புரிந்த
ஏ.நவீன்குமார்; ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;18.4.2016 அன்று மதுரை மாநகர், திருநகர் காவல் நிலையத்தில்தலைமைக் காவலராகப் பணி புரிந்த .மதுரைச்சாமி அவர்கள் கண்மாயில்குளிக்கச் சென்ற போது தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

24.5.2016 அன்று திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-ம் அணியில் பயிற்சி பெற்று வந்த பயிற்சி காவலர் சந்தோஷ்குமார் மணிமுத்தாற்றில் குளிக்கும் போது மயங்கி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; 26.3.2016 அன்று சென்னை, குரோம்பேட்டைப் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மஸ்தூராகப் பணி புரிந்த சென்னைஎம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த உதயகுமார்;  தருமபுரி மாவட்டம், பொம்மிடி பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கம்பியாளராகப் பணி புரிந்த . கோவிந்தராஜ்; 19.5.2016 அன்று திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், கொடநகர் கிராமத்தைச் சேர்ந்த . பரசுராமன் என்பவரின் மகன் பாண்டியன்;ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; 4.3.2016 அன்று பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மஸ்தூராகப் பணி புரிந்த  இமயவரம்பன் அவர்கள் மின்கம்பித்தில் ஏறி மின்தடையினை சரி செய்யும் பணியினை மேற்கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவி்த்துள்ளார்.