பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு

ஜூன் 23 ,2017, வெள்ளிக்கிழமை, 

சென்னை : அமித்ஷா ஆதரவு கேட்டதற்கு இணங்க பாரதீய ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிப்பதாக  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

ஓ.பன்னீர் செல்வம்  அ.தி.மு.க புரட்சிதலைவி அம்மா அணிசார்பில் நேற்று  கிரீன்வேஸ் கார்டனில் அவரது வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “ராம்நாத் கோவிந்த் ஒரு சிறந்த நிர்வாகி என்பதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தலித் ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்”. தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் அவருக்கு எங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.