அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்: “படையாட்சியார் பேரவையின்” மாநில தலைவர் காந்தி டிஜிபி அலுவலகத்தில் புகார்

அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்: “படையாட்சியார் பேரவையின்” மாநில தலைவர் காந்தி டிஜிபி அலுவலகத்தில் புகார்

வியாழன் , ஜனவரி 21,2016,

சென்னை – பாமக நிறுவனர் ராமதாஸ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் படையாட்சியார் பேரவையின் மாநில தலைவர் காந்தி டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு விவரம் வருமாறு:– பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 1980ம் ஆண்டு முதல் வன்னியர் சங்கம் என்ற பெயரில் தனி அமைப்பை தொடங்கி அதற்காக பணம் வசூல் செய்தார்.

வன்னியர் சமுதாயத்திற்காக கோனேரிகுப்பம் என்ற இடத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகம் கட்டுகின்றேன் என கூறி வசூல் செய்த பணத்தில் தன்னுடைய மனைவி பெயரில் பல கல்லூரிகளை நிறுவியுள்ளார். இது மட்டுமின்றி பல கோடி வசூல் செய்து கொண்டு தனி நபர் பெயரில் டிரஸ்ட் துவங்கியுள்ளார்.

கோனேரி குப்பம் பகுதியில் அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் ராமதாஸ் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.