பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக  உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

வியாழன் , பெப்ரவரி 11,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதா ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை வட்டம், பாம்பாறு அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 120 கன அடி வீதம் 85 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பாவக்கல், எட்டிப்பட்டி, நடுப்பட்டி, மிட்டப்பள்ளி உள்ளிட்ட 15 கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.