பாலாறு தடுப்பணையில் தவறி விழுந்த விவசாயி சீனிவாசன் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சீனிவாசன் குடும்பத்தினர் நன்றி

பாலாறு தடுப்பணையில் தவறி விழுந்த விவசாயி சீனிவாசன் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சீனிவாசன் குடும்பத்தினர் நன்றி

ஞாயிறு, ஆகஸ்ட் 21,2016,

சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை மீது நின்று தவறி விழுந்து உயிரிழந்த கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, 3 லட்சம் ரூபாய் நேற்று வழங்கப்பட்டது. நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட சீனிவாசனின் மனைவி காமாட்சி, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார்.

கடந்த மாதம் 29-ம் தேதி வாணியம்பாடி வட்டம் புல்லூர் மதுரா கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மீது நின்று வேடிக்கை பார்த்தபோது, தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, சீனிவாசனின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார். அதன்படி, நேற்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த சீனிவாசனின் மனைவி காமாட்சியிடம் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் டாக்டர். நிலோஃபர் கபில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சி.அ.ராமு ஆகியோர் நேரில் வழங்கினர். நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சீனிவாசனின் மகள் ஜெயபாரதி நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தார்.