பாளையங்கோட்டை திமுக வேட்பாளர் மைதீன்கான் உருவ பொம்மை மீண்டும் எரிப்பு

பாளையங்கோட்டை திமுக வேட்பாளர் மைதீன்கான் உருவ பொம்மை மீண்டும் எரிப்பு

புதன், ஏப்ரல் 20,2016,

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்றக்கோரி பாளையங்கோட் டையில் அவரது உருவ பொம் மையை எரித்தும், சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டை முற்றுகையிட்டும் திமுகவில் ஒரு தரப்பினர் போராட் டம் நடத்தியிருந்தனர்.

திமுக நிர்வாகி சிவன் என்பவர் வண்ணார்பேட்டை செல்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலப்பா ளையத்தில் மைதீன்கான் அலுவ லகத்தையும் பெண்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலையில் வண்ணார்பேட்டையிலுள்ள செல்லபாண்டியன் ரவுண்டானா மேம்பாலத்தில் டிபிஎம் மைதீன் கான் பெயரை எழுதி, ஓடிப்போய் விடு என்று குறிப்பிட்டு உருவ பொம்மையை அடையாளம் தெரியாதவர்கள் தூக்கில் தொங்கவிட்டிருந்தனர். பாளையங் கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் உள்ளிட்ட போலீஸார் அங்குவந்து அந்த உருவபொம்மையை அங்கிருந்து அகற்றினர். இதனிடையே நேற்று நண்ப கலில் பாளையங்கோட் டையில் மாவட்ட நீதிமன்றம் அருகே மைதீன்கான் உருவபொம்மையை அடையாளம் தெரியாதவர்கள் எரித்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து தகவல் கிடைக்க வில்லை என்பதால் உடனே அந்த இடத்துக்கு போலீஸார் செல்லவில்லை.

சாலையோரம் பாதி எரிந்த நிலையில் உருவ பொம்மை கிடந்தது. இதுகுறித்தும் போலீஸார் விசாரிக்கிறார்கள்.