புயல் பாதித்த பகுதியில் மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

புயல் பாதித்த பகுதியில் மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

செவ்வாய், டிசம்பர் 13,2016,

‘வார்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

முதல்கட்டமாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலைப் பகுதியைப் பார்வையிட்டார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டதைப் பார்வையிட்டதோடு, பணிகளை துரிதப்படுத்தினார்.

அடுத்த கட்டமாக, மணலியில் உள்ள நிவாரண முகாம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து அங்கிருந்து பழவேற்காடு சென்ற அவர் பாதிப்புகளை பார்வையிட்டார்.

பொன்னேரியில் மீனவர்கள் படகுகள் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, மீனவர்களிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார். மேலும், அவர்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.