பெரியாரிசம் பேசும் ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக நடத்திய கோமாதா பூஜை!

பெரியாரிசம் பேசும் ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக நடத்திய கோமாதா பூஜை!

வெள்ளி, பெப்ரவரி 12,2016,

எதிர்ப்புகள் தானாக விலகவும், முதல்வர் பதவியில் அமரவும், கோ பூஜையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்றதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில், ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று ஓட்டேரி பகுதிவாசிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள, ‘மெட்ராஸ் பிஞ்சராபோல் டிரஸ்ட்’டிற்கு சென்றார். இந்த டிரஸ்ட், 50 ஏக்கர் பரப்பளவில் செயல்படுகிறது. இங்கு, 2,000த்திற்கும் மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோசாலைக்கு, தங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பசுக்களை தானமாக வழங்குவது வழக்கம்.
அதனால், இங்கு பசுக்களுக்கு அவ்வப்போது, கோ பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

நேற்று தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ‘மெட்ராஸ் பிஞ்சராபோல் டிரஸ்ட்’டிற்கு சென்ற போது, அங்கு, பசுக்களை குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம் பூசி, கோ பூஜைக்கு தயாராக வைத்திருந்தனர். ஸ்டாலின் சென்றதும், பசு மற்றும் கன்றுகளுக்கு மாலைகள் அணிவித்தார்; வாழைப்பழம் மற்றும் பசுந்தழைகளை வழங்கினார். பின், கோ பூஜை நடத்தும் முக்கிய அறைக்கு, அவர் மட்டும் சென்றார். அங்கு, பூஜை முடிவடைந்ததும், பசு மாடுகளை பராமரிக்கிற பணிகளில் ஈடுபடும், 50 தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும், எதிர்ப்புகள் தானாகவே விலகவும், முதல்வர் பதவியில் அமரவுமே, பிஞ்சராபோல் டிரஸ்டில் நடைபெற்ற கோ பூஜை யில், அவர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

பெரியாரிசம் பேசிக்கொண்டு கோ பூஜை நடத்துவதும், கோவில் கோவிலாய் ஏறி இறங்குவதும் வெட்கக்கேடான செயல்  என்று பொது மக்கள் கருதுகின்றனர்.