பொன்னேரியில் ரூ.13 ஆயிரம் கோடியில் தொழில் முனையம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரூ.13 ஆயிரத்து 314 கோடியில் தொழில் முனையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன்படி, சென்னை – பெங்களூரு தொழில் வளாகத் திட்டத்தில் உள்ள பொன்னேரி தொழில் முனையம் ரூ.13 ஆயிரத்து 314 கோடியில் 20 ஆண்டுகளில் 3 கட்டங்களாக மேம்படுத்தப்படும். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள 10 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 21 ஆயிரத்து 996 ஏக்கரில் இந்த மையம் அமையும்.

ரூ.50 கோடியில் உயிரி தொழில்நுjayalalithaa-swearingட்ப மூலதன முதலீட்டு நிதி உருவாக்கப்படும். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம், 16 ஆயிரம் சதுர மீட்டர் கண்காட்சி அரங்குகள், உணவு அரங்கம், பல அடுக்க வாகன நிறுத்துமிடம், ஊழியர்கள் தங்குமிடம், பயன்பாட்டு கட்டிடம் போன்ற வசதிகளுடன் ரூ.298 கோடியில் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.