பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியம் வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க புகார்

பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியம் வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க புகார்

ஞாயிற்றுக்கிழமை, மே 08, 2016,

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியம், சென்னை கிண்டியில் வசிக்கும் கண்ணன் என்பவரின் வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும், இதுதொடர்பாக வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்த மா. சுப்ரமணியத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அ.இ.அ.தி.மு.க. சார்பில், தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. வேட்பாளர்கள் மீது பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ள நிலையில், சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியம், சென்னை கிண்டி திரு. வி.க. தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் வீட்டை, போலி ஆவணங்களைக் கொண்டு அபகரித்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட கண்ணன் சார்பில், அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த திரு. குரலர் கோபிநாதன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனுக்களை அளித்துள்ளார். மா.சுப்பிரமணியம், தான் குடியிருக்கும் வீட்டை தனது மனைவி பெயரில் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளதாக, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீடு, கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அதை போலி ஆவணம் மூலம் சுப்பிரமணியம் தனது மனைவி பெயரில் மாற்றியுள்ளதாகவும், வழக்கறிஞர் கோபிநாதன் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் புகார் மனுவில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மா. சுப்ரமணியத்தை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.