மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மூன்றரைக்கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மூன்றரைக்கோடி ரூபாய் வங்கி கடன்  வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

திங்கள் , செப்டம்பர் 12,2016,

நெல்லை மாவட்டத்தில் 150 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மூன்றரைக்கோடி ரூபாய் வங்கிகடன் வழங்கப்பட்டுள்ளது. கடனுதவியைப் பெற்றுக்கொண்ட பெண்கள்,கடனுதவியை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், குழு தலைவர்களுக்கு விலையில்லா கைப்பேசி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் புதுவாழ்வு திட்டம் மற்றும் மாவட்ட வங்கிகள் ஒருங்கிணைப்பு குழு இணைந்து நடத்திய சுய உதவிக்குழு பெண்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவில், மானூர், குருவிகுளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் மேலநீலிதநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150 சுயஉதவிக்குழுக்களுக்கு, சுமார் மூன்றரைக்கோடி ரூபாய் வங்கிகடன் வழங்கப்பட்டது. கடனுதவியை பெற்றுக்கொண்ட சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

இவ்விழாவில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி.வி.எம்.ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட ஆட்சியர் திரு.கருணாகரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.