மதுரையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது : ஆங்கில பத்திரிகைக்கு மு.க.அழகிரி பேட்டி

மதுரையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது : ஆங்கில பத்திரிகைக்கு மு.க.அழகிரி பேட்டி

வியாழன் , மே 12,2016,

நடைபெறவிருக்கும் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது, முன்னாள் அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி கூறினார்.

தில்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், திமுகவுக்கு என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியவில்லை என்றார்.

மே 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தான் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை என்றும் அவர் கூறினார்.

மதுரையில் எத்தனை தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற கேள்விக்கு, ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது என்றார் மு.க.அழகிரி.