மதுரை கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இளைஞரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வெளியேறிய அன்புமணி ராமதாஸ்

மதுரை கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இளைஞரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வெளியேறிய அன்புமணி ராமதாஸ்

புதன், மார்ச் 30,2016,

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளைஞரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பா.ம.க அன்புமணி, நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வெளியேறியது, அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மதுரையில் பா.ம.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் மகன் அன்புமணி, பொதுமக்களிடம் கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக பொதுமக்களை வலுக்கட்டாயமாக அழைத்துவந்த பா.ம.க.வினர், அங்கிருந்த சிலரிடம் தாங்கள் தயாரித்த கேள்வித் தாள்களை வழங்கி கேள்வி கேட்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அப்போது இளைஞர் ஒருவர், அந்த கேள்வித்தாளை திருப்பி கொடுத்துவிட்டு, அன்புமணியிடம்  நீங்கள் ஜாதி அரசியல் நடத்துகிறீர்கள், வந்நியர்களுக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள், என சராமரியாக கேள்விகளை கேட்டார். அவரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அன்புமணி ராமதாஸ் திணறினார்.

இளைஞர் தனது கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு தான் அடுத்தவரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என உறுதியாக நின்றதால், திக்குமுக்காடிய அன்புமணி, கலந்துரையாடல் நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வெளியேறினார். அன்புமணி ராமதாஸின் இந்த செயல், அக்கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.