மதுரை நிலையூரில் பகுதிநேர புதிய நியாயவிலைக்கடை : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

மதுரை நிலையூரில் பகுதிநேர புதிய நியாயவிலைக்கடை : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

சனி, ஜூலை 09,2016,

மதுரை நிலையூரில் பகுதிநேர நியாயவிலைக்கடை திறக்கப்பட்டதற்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெண்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

மதுரை நிலையூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், நியாயவிலைக்கடையில் பொருட்கள் வாங்க திருப்பரங்குன்றம் வரை பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில், பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, நிலையூரில் பகுதிநேர நியாயவிலைக்கடையை திறக்க உத்தரவிட்டார். நியாயவிலைக்கடையை மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவ ராவ் திறந்துவைத்து அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விற்பனையை தொடங்கிவைத்தார். தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெண்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

இங்கு பொருட்கள் வாங்கும் நுகர்வோரின் கைப்பேசிக்கு பொருட்களின் அளவு, கடை எண், குடும்ப அட்டை எண் உள்ளிடட்வை குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. இதை வைத்து பொருட்கள் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.