மறைத்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை புனித வழிபாட்டுத் தலமாக மாற்ற வேண்டும் ; அதிமுக இலக்கிய அணி தீர்மானம்

மறைத்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை புனித வழிபாட்டுத் தலமாக மாற்ற வேண்டும் ; அதிமுக இலக்கிய அணி தீர்மானம்

வியாழக்கிழமை, பிப்ரவரி 02, 2017,

சென்னை ; மெரினா கடற்கரையில் அமைய உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு சின்னம் ஒரு புனித வழிபாட்டுதலமாக மாற்றப்பட வேண்டும் என்றும், பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கூட்டம் இலக்கிய அணி செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு:-

 

இந்திய மக்கள் பாராட்டும் ஜெயலலிதாவுக்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க வேண்டும் என்ற பொதுச்செயலாளர் சசிகலாவின் கோரிக்கையை மத்திய அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

மெரினா கடற்கரையில் அமைய உள்ள ஜெயலலிதாவின் நினைவு சின்னம் ஒரு புனித வழிபாட்டுதலமாக மாற்றப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெற எல்லா ஏற்பாடுகளையும் செய்த அம்மாவின் அரசுக்கும், ஒத்துழைத்த மாணவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பது.

ஜெயலலிதாவின் உருவம் பொறித்த தபால் தலை மற்றும் நாணயங்களை வெளியிட மத்திய அரசை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.