மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம்,குடும்பமாக அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம்,குடும்பமாக அஞ்சலி

சனி, டிசம்பர் 10,2016,

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர்,சென்னை மெரீனா கடற்கரைக்கு குடும்பம், குடும்பமாக வந்து,  கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் அவரது நினைவிடத்தில் தினமும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.அதிமுக தொண்டர்கள் சிலர் மொட்டை அடுத்து, மறைந்த தங்களது தலைவிக்கு அஞ்சலி செலுத்தினர்.

மெரீனா கடற்கரைக்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களின் வசதிக்காக காலை முதல் இரவு வரை குடிநீர், உணவு வழங்க அதிமுக தலைமைக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதேபோல், தேவைப்படும் பொது மக்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் நடமாடும் மருத்துவமனை, நினைவிடப் பகுதிகளில் தலா 4 நடமாடும் சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.