மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரண செய்தி கேட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வி.கே. சசிகலா நிதியுதவி வழங்கி ஆறுதல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரண செய்தி கேட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வி.கே. சசிகலா நிதியுதவி வழங்கி ஆறுதல்

செவ்வாய், ஜனவரி 10,2017,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  உயிரிழந்த செய்தியைக் கேட்டும், மரணம் அடைந்தவர்களில் முதற்கட்டமாக 166 பேரின் குடும்பத்தினருக்கு, தலா 3 லட்சம் ரூபாய் குடும்பநல நிதியுதவியும், தொடர்புடைய விபத்துக்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் என, 168 பேருக்கு 4 கோடியே 99 லட்சம் ரூபாய் நிதியுதவியை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், கழகப் பொதுச்செயலாளர் சசிகலா இந்த நிதியுதவியை வழங்கினார்.

இதன்படி, வட சென்னை தெற்கு மாவட்டம், காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் தெற்கு, சேலம் மாநகர், சேலம் புறநகர், பெரம்பலூர், அரியலூர், மதுரை புறநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 166 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் மற்றும் சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 4 கோடியே 99 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.