மறைமலைநகர் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் தொடக்கம் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

மறைமலைநகர் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் தொடக்கம் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

ஞாயிறு, ஆகஸ்ட் 14,2016,

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், மறைமலைநகர் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்திட்டத்தை தொடங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மறைமலைநகர் நகராட்சியில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில், நகராட்சிக்கு உட்பட்ட 135 இடங்களில் எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் சேகரிப்பு திட்டம் மூலம் 15-க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அப்பகுதி மக்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.