மழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாகக் கையாண்டது: ஆளுநர் ரோசய்யா புகழாரம்

மழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாகக் கையாண்டது: ஆளுநர் ரோசய்யா புகழாரம்

புதன், ஜனவரி 20,2016,

தமிழகத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டது என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் ரோசய்யா, ஒரே நாளில் பெய்த பெரும் மழையால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும், வெள்ள மீட்புப் பணிகளை மாநில அரசு துரிதமாக மேற்கொண்டது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 36,840 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

மாநில அரசின் நடவடிக்கைகளால் தொற்றுநோய் பரவல் தடுக்கப்பட்டது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 7244 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டது.

பல வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.