மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகை திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் பேர் பலன்

மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகை திட்டத்தின்  மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் பேர் பலன்

புதன், ஜூலை 13,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய மாநகர பேருந்து பயண சலுகை திட்டம் மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் மூத்த குடிமக்கள் பயனடைந்துள்ளனர்.

பிறந்த குழந்தை முதல், சின்னசிறார்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினர் நலன்களுக்காவும் திட்டங்களை தீட்டி வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். இதையடுத்து, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள், பணிமனைகள் என 42 இடங்களில் அதற்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இதுவரை சுமார் 2 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை சுமார் ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு கட்டணமில்லா பயண அட்டை புதுப்பித்து தரப்பட்டிருப்பதாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.