மின்சாரம் தாக்கி பலியான 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி:முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மின்சாரம் தாக்கி பலியான 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி:முதல்வர்  ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், பெப்ரவரி 02,2016,

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தேனி மாவட்டம், நாராயணதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம்; திருப்பூர் மாவட்டம், மூலனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி; கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அச்சுதானந்தம்; ஆகிய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தொழிலாளர்கள் பணியிலிருக்கும் போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் கிராமத்தைச் சேர்ந்த ராமு; கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி பகுதியைச் சேர்ந்த சுபாஷ்; கடலூர் மாவட்டம், கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன்; கடலூர் மாவட்டம், மு.பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி மனைவி செல்வி; விழுப்புரம் மாவட்டம், கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ்; திருவள்ளுர் மாவட்டம், ஆரம்பாக்கம் மஜ்ரா, பாட்டைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர்; வேலூர் மாவட்டம், குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபு மற்றும் அவரது மனைவி பாரதி; ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 11 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

காஞ்சிபுரம் மாவட்டம், கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் பாபு; திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம்; ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 3 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.