மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டார் குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ்

மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டார்  குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ்

செவ்வாய், மே 10,2016,

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற காங்கிரஸ் வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான பிரின்ஸ், மீனவ மக்களின் எதிர்ப்பால் விரட்டி விடப்பட்டார்.

குளச்சல் தொகுதி எம்.எல்.ஏவாக பதவி வகிப்பவர் பிரின்ஸ். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவருக்கு திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் மீனவ கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரின்ஸ் சென்றபோது மீனவ குடும்பத்தினர், அவரது பிரசார ஜீப்பை சூழ்ந்து கொண்டு, பேச கூடாது, திரும்பி போ என்று கூச்சலிட்டனர். பிரின்ஸ் பேச்சை நிறுத்தியபோதிலும் ஊரை விட்டு வெளியே போகுமாறு மீனவர்கள் கூறியதோடு, அவரது ஜீப்பை கைகளால் அடிக்க தொடங்கினர். இதையடுத்து  நான் ஊரை விட்டு வெளியே போகிறேன் என்று கூறிய பிரின்ஸ் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

கடந்த ஐந்தாண்டுகளில் மீனவர் பிரச்சினைக்கு பிரின்ஸ், செவிசாய்க்கவில்லை என்பது அம்மக்களின் கோபத்திற்கு காரணம்.