முதலமைச்சர் உத்தரவுப்படி,நாகை மாவட்டத்தில் நடத்தப்பட்ட 687 மருத்துவ முகாம்கள் மூலம் 80 ஆயிரம் பேர் கடந்த ஒரு மாதத்தில் பயனடைந்துள்ளனர்

முதலமைச்சர் உத்தரவுப்படி,நாகை மாவட்டத்தில் நடத்தப்பட்ட 687 மருத்துவ முகாம்கள் மூலம் 80 ஆயிரம் பேர் கடந்த ஒரு மாதத்தில் பயனடைந்துள்ளனர்

செவ்வாய், டிசம்பர் 15,2015,

முதலமைச்சர்  ஜெலலிதா உத்தரவுப்படி, நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மழைக்காலத்தையொட்டி நடத்தப்பட்ட 687 மருத்துவ முகாம்கள் மூலம் 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை பெய்தபோது நாகை மாவட்டம் பெரும் பாதிப்பில் இருந்து தப்பியது. இருப்பினும், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், மழை காலங்களில் ஏற்படும் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில், இரத்தப்பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், மேல் சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்த மருத்துவ முகாம்கள் மூலம் நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது. இதுவரை 687 மருத்துவ முகாம்கள் மூலம் 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். முதலமைச்சர்  உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாம்களில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதால், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.