முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, 68 வகையான சீர்வரிசை பொருட்களுடன்,68 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, 68 வகையான சீர்வரிசை பொருட்களுடன்,68 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி  வைக்கப்பட்டது

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 05, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 68 ஜோடிகளுக்கு உடுமலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சரின் வாழ்த்து மடலை வாசித்து, 68 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி அமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில், உடுமலை டாக்டர் எம்.ஜி.ஆர். அரங்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 68 ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. உடுமலை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்த பின்னர், 68 ஜோடிகளும், திருமணம் நடைபெறும் திடலுக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். அமைச்சர் திரு. எம்.எஸ்.எம். ஆனந்தன் இவ்விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்பிய வாழ்த்து மடலை வாசித்தார்.

மணமக்களுக்கு 68 வகையான சீர்வரிசை பொருட்களை சட்டப்பேரவை துணை தலைவர் திரு. வ. பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார். திருமண விழாவில், அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் திரு. உடுமலை ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சீர்வரிசை பொருட்களை பெற்று கொண்ட மணமக்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டனர்.