முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத் தொண்டர்கள் ரத்ததானம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத் தொண்டர்கள் ரத்ததானம்

செவ்வாய் , பிப்ரவரி 23, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவமுகாம்கள் நடைபெற்றன. கழகத் தொண்டர்கள் ரத்ததானம் அளித்தனர்.

தென் சென்னை வடக்கு மாவட்ட கழக மாணவர் அணி சார்பில் சென்னை அண்ணாசாலை அரசு காயிதே மில்லத் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மாணவர் அணிச் செயலாளர் திரு.எஸ்.ஆர்.விஜயகுமார் முகாமை தொடங்கிவைத்தார். ஏராளமான மாணவிகள் ரத்த தானம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் கந்தசாமிபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதயம், சீறு நீரகம், கண் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்ட கழக மாணவர் அணி சார்பில் தேனி தபால் நிலையம் அருகே ரத்ததான முகாம் நடைபெற்றது. கழக நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, கழக மாணவர் அணி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர் அணியைச் சேர்ந்த 108 பேர் ரத்த தானம் செய்தனர். தாட்கோ தலைவர் திரு.எஸ்.கலைச்செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.