முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரமும், வெள்ளி கொலுசும் அணிவிக்கப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரமும், வெள்ளி கொலுசும் அணிவிக்கப்பட்டது

வெள்ளி, பெப்ரவரி 26,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி, அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அ.இ.அ.தி.மு.க.வினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனகோட்டை ஊராட்சியில் கழக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம், 2,500 ஏழை பெண்களுக்கு விலையில்லா புடவைகளையும், ஒரு குடும்பத்தினருக்கு கன்றுடன் கூடிய கறவை மாட்டையும் வழங்கினார். இதில், தஞ்சை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. ரங்கசாமி எம்.எல்.ஏ., மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஆதனகோட்டையில் உள்ள முருகன் கோயிலில் மகளிர் அணியினர் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், முகையூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தையும், நோயாளிகளுக்கு பழம், ரொட்டி உள்ளிட்டவற்றையும் அமைச்சர் திரு. ப. மோகன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தையல் பயிற்சியினை கற்கும் வகையில், 20 தையல் இந்திரங்களை வழங்கியதுடன், பயிற்சியினையும் அமைச்சர் முக்கூர் திரு. என். சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்கமோதிரமும், வெள்ளி கொலுசும் அணிவிக்கப்பட்டது. இதில், கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. கழக நிர்வாகிள் பலர் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், 668 பேருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகர கழகம் சார்பில், நலிவுற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், ரத்ததான முகாமும், பொதுமருத்துவமுகாமும் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சிறப்பு பரிசோதனையும் மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை-எளியோருக்கு வேட்டி, சேலை, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் அரசு மருத்துவமனையில், பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

நாகை மாவட்டம், சீர்காழி தொகுதி அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருவெண்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 68 பேருக்கு வேட்டி, சேலை, தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.