முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்ற திருப்பூர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்ற திருப்பூர்

வியாழன் , மார்ச் 17,2016,

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில், திருப்பூர் பின்னலாடை தொழில் அழிவின் விளிம்புக்கு சென்ற நிலையில், 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே திருப்பூர் முதலிடம் பெற்றுள்ளதாக பாராட்டு கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

பின்னலாடை நகரம் என்றழைக்கப்படும் திருப்பூரில் ஆயிரத்து 500 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு பனியன் நிறுவனங்கள், 650-க்கும் அதிகமான சாய சலவைப் பட்டறைகள் மற்றும் 18 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு சாயக்கழிவுநீர் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், விவசாயத்தையும் காரணம்காட்டி அப்போதைய மைனாரிட்டி தி.மு.க. அரசும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும் பின்னலாடைத் தொழிலை அழியும் நிலைக்கு தள்ளிவிட்டன. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பாதிப்புக்கு ஆளானார்கள்.

இந்நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதும், திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிக்க வட்டியில்லா கடனுக்கு 200 கோடி ரூபாய் வழங்கினார். நிலத்தடி நீர் மாசுபடாமல் இருக்கும் வகையில், சாயத்தொழிலுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. மேலும், தடையில்லா மின்சாரம் மற்றும் பல்வேறு சிறப்புத் திட்டங்களாலும், முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவும் வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே திருப்பூர் முதலிடம் வகிப்பதாக பாராட்டு பெற்றுள்ளது. பனியன் தொழிலுக்கு புத்துயிர் தந்து, பனியன் ஏற்றுமதி 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயரவும், வேலைவாய்ப்பு பெருகவும், வழிவகுத்து தந்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பினர் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

வரும் 2020-ல் பனியன் ஏற்றுமதி ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயரவும், முதலமைச்சரின் நடவடிக்கைகள் உதவிகரமாக உள்ளன பனியன் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.