முதலமைச்சர் ஜெயலலிதாவின் ”அம்மா உணவகம் திட்டம்” டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களிலும் அறிமுகமாகிறது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ”அம்மா உணவகம் திட்டம்” டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களிலும் அறிமுகமாகிறது

வியாழன் , மார்ச் 31,2016,

முதல்வர் ஜெயலலிதாவின் அற்புதத் திட்டமான ‘அம்மா உணவகம்’ திட்டத்தை டெல்லி, பீகார் மாநிலங்களிலும் அமல்படுத்த அம்மாநில அரசுகள் முடிவுசெய்துள்ளன. காலத்தால் அழியாத திட்டமான முதல்வர் ஜெயலலிதாவின் ”அம்மா உணவக திட்டம்” பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. டெல்லி மாநில அரசு அங்கு மலிவு விலை உணவுக் கடைகளை தொடங்க பட்ஜெட்டில்  10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், பீகார் மாநிலத்திலும், தமிழகத்தை பின் பற்றி இத்திட்டத்தை தொடங்குமாறு மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், பீகார் முதலமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகங்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் ஒருமித்த ஆதரவையும், பாராட்டையும் பெற்றுள்ளது. தனியார் உணவகங்களில் பல நூறு ரூபாய் செலவிட்டு, சாப்பிடும் உணவை வெறும் 10 ரூபாயில் அம்மா உணவகங்களில் வயிறார சாப்பிட முடிவதால், ஏழை, எளிய மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த திட்டத்தால் கவரப்பட்ட டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியிலும் இது போன்ற மலிவு விலை உணவக ங்கள் தொடங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, டெல்லி மாநில அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், ரிக்ஷா தொழிலாளர்கள், தினக்கூலி ஊழியகள், கட்டடத் தொழிலாளர்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில், மலிவு விலையில் உணவகங்களை தொடங்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இதனை தெரிவித்தார்.