முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில், ஏழை எளிய மக்களுக்காக 12 லட்சத்து 33 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன ; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில், ஏழை எளிய மக்களுக்காக 12 லட்சத்து 33 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன ; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் உட்பட ஏழை எளிய மக்களுக்காக, 12 லட்சத்து 33 ஆயிரத்து 262 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று , வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி, கடந்த 5 ஆண்டுகளில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வரும் பசுமை வீடுகள் உட்பட 12 லட்சத்து 33 ஆயிரத்து 262 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தி.மு.க. ஆட்சியின்போது முடிக்காமல் விட்டுச்சென்ற 3 லட்சம் வீடுகளுக்கும் 490 கோடி ரூபாயை ஒதுக்கி, முதலமைச்சர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களை கடன் சுமையிலிருந்து பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.