முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து,4 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாக்கு சேகரிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து,4 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாக்கு சேகரிப்பு

புதன், நவம்பர் 16,2016,

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய இருப்பதால், இத் தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கழகத் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர், வாக்காளர்களை சந்தித்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகத்தான மக்கள் நலத் திட்டங்களையும், எண்ணற்ற சாதனைகளையும் விளக்கமாக எடுத்துரைத்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு பேராதரவு திரட்டி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. ஓம்சக்தி சேகரை ஆதரித்து, பெரியார் நகரில் உள்ள வினோபா தெரு, முருகன் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், புதுச்சேரி மாநில கழக செயலாளருமான திரு. புருஷோத்தமன், என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ரங்கசாமி, தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் திரு. ஷேக் தாவூத் உட்பட கழகத்தினர் பலர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. செந்தில்பாலாஜியை ஆதரித்து, ஈசநத்தம், பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் கழகத் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களும், அமைச்சர்களுமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி, திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர், மற்றும் அமைச்சர்கள் டாக்டர். நிலோபர் கபில், திரு. பாலகிருஷ்ணா ரெட்டி, கழக தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர் திரு. அன்வர் ராஜா எம்.பி., தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் திரு. தனியரசு எம்.எல்.ஏ., மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் திரு. தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேலாயுதம்பாளையம், ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களும், அமைச்சர்களுமான திரு. P. தங்கமணி, திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் டாக்டர் வி. சரோஜா, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் திரு. உ.தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் திரு. தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றியுள்ள மகத்தான சாதனை திட்டங்களை எடுத்துக்கூறி, கழக வேட்பாளர் திரு. வி. செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் கழக வேட்பாளர் திரு. வி. செந்தில் பாலாஜியை ஆதரித்து, மலைக்கோவிலூர், நாகம்பள்ளி ஆகிய பகுதிகளில் அமைச்சர் திரு. K.P. அன்பழகன் உட்பட ஏராளமான அ.இ.அ.தி.மு.க.வினர் வீதி வீதியாகச் சென்று, முதலமைச்சர்  ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினர்.

அரவக்குறிச்சி ஒன்றியத்தின் மலைக்கோவிலூர், தடாகோவில் ஆகிய இடங்களில் பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில் அமைச்சர்கள் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர், திரு.K.P. அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கினர்.

நாகம்பள்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திரு. K.P. அன்பழகன் மற்றும் திரைப்படத்துறையினர் பலரும் கலந்துகொண்டு கழக அரசின் சாதனைகளை விளக்கமாக எடுத்துரைத்து, கழகவேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் கழக வேட்பாளர் திரு. வி. செந்தில் பாலாஜியை ஆதரித்து, வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நொய்யல் குறுக்கு சாலை, புஞ்சை புகளூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் அமைச்சர் திரு. சேவூர் எஸ். ராமசந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இத்தொகுதிக்குட்பட்ட புஞ்சை புகளூர் பேரூராட்சி, கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கழக நிர்வாகிகள் கிராமங்கள்தோறும் சென்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்து ஆதரவு திரட்டினர்.

மொஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூமேடு, பசுபதிபாளையம் காலனி, வைரமடை உள்ளிட்ட பகுதிகளில், தேர்தல் பணியாற்றும் கழக பொறுப்பாளர்கள் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் கழக வேட்பாளர் திரு. எம். ரெங்கசாமிக்கு ஆதரவாக, கழகத் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும் அமைச்சருமான திரு.S.P. வேலுமணி மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இத் தொகுதிக்கு உட்பட்ட பர்மா காலனி, அண்ணாநகர், செல்வாநகர், மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று, கழக அரசின் சாதனைகள் கொண்ட பிரசுரங்களை வழங்கி அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவு திரட்டினர்.

தஞ்சை மாநகராட்சியின் 44-வது வார்டுக்குட்பட்ட வண்டிக்காரத்தெரு, கோரிக்குளம், அண்ணா காலனி, சேவியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழகத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளரும், அமைச்சருமான திரு. ஆர். காமராஜ், வீடு வீடாகச் சென்று, தஞ்சை பகுதி மக்களின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து, கழக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

தஞ்சை மாநகராட்சியின் 27-வது வார்டுக்குட்பட்ட கோட்டை, கீழலங்கம் ஆகிய பகுதிகளில் கழகத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளரும், அமைச்சருமான திரு. G.பாஸ்கரன் மற்றும் கழக நிர்வாகிகள், கிராமிய கலைஞர்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று அவர்களுக்காக, முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இத்தொகுதியின் பிள்ளையார்பட்டி ஊராட்சிப் பகுதியில் தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் அமைச்சர்கள் திரு. வெல்லமண்டி என். நடராஜன், திருமதி எஸ். வளர்மதி, திரு. பாலகிருஷ்ணாரெட்டி மற்றும் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளரும், கழக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான திரு. ப.குமார் எம்.பி. உள்ளிட்டோர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணற்ற சாதனைகளை எடுத்துக்கூறி, கழக வேட்பாளர் திரு. எம். ரெங்கசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

கரந்தை பகுதிக்குட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளில், பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் அரசு தலைமைக்கொறடா திரு. தாமரை எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் தொகுதி மாரியம்மன் கோயில் ஊராட்சிப் பகுதியில் கழக வேட்பாளர் திரு. எம். ரெங்கசாமியை ஆதரித்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் திரு. சரத்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு.A.K.போஸ், மகத்தான வெற்றி பெறும் வகையில், தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், சிலைமான் பகுதியில் நடைபெற்றது. கழகத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களும், அமைச்சர்களுமான திரு. ஓ.பன்னீர்செல்வம், திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன், திரு.R.B. உதயகுமார் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது இத்தொகுதிக்கான கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், அமைச்சருமான திரு.K.T. ராஜேந்திர பாலாஜி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. ஸ்ரீதர் வாண்டையார் உட்பட ஏராளமானோர் பிரச்சாரம் மேற்கொண்டு, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்து ஆதரவு திரட்டினார்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருநகர் பகுதியில், பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் திரு. கே. பாண்டியராஜன் மற்றும் காஞ்சிபுரம் மேற்கு மற்றும் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் உட்பட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதனிடையே, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிகளில், வாக்காளப் பெருமக்கள், இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு வழங்கி, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அ.இ.அ.தி.மு.க.வை மகத்தான வெற்றிபெறச் செய்யவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையின் நகல்கள் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அறிக்கையினை பொதுமக்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

அவனியாபுரம் பகுதியில், வாக்காளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் திரு. சரத்குமார், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய ஒரே தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சாமநத்தம் பகுதியில் தேனி மாவட்ட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும், கழக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் கழக வேட்பாளர் திரு. A.K. போஸை ஆதரித்து, சிலைமான் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. தமிமுன் அன்சாரி, இஸ்லாமிய பெருமக்களுக்காக முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ள பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.